2 பேருந்துகள் மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலைதடுமாறி தனியார் பேருந்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுனர் முத்து, மாரிமுத்து, பயணிகள் அனுசியா, ஜெயராணி, சுபத்ரா, ஸ்ரீரங்க ராணி, இசக்கியம்மாள், உள்பட 30-க்கும் மேற்பட்டடோரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.