Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் பரபரப்பு …!!காலனி கடையில் தீவிபத்து…!! 5 பேர் உயிரிழப்பு…!!

நேபாளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்

நேபாள நாட்டில் டாங்  மாவட்டத்தில் துளசிபூர்  எனும் நகரில் காலணி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 4 பேர் என  மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 4 ஆண்கள் மற்றும் 1 பெண் ஆகியோரது  உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் சுஜிதா கட்டூன்  (வயது 13) ஹசன் பக்ஷ் ( வயது 14)மசின் பக்ஷ்  (வயது 15)நஜாருதீன்அலி (வயது 40) மற்றும் அபிதீன் அலி (வயது 5) ஆகியோர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மின்கசிவால் இந்த விபத்து நடந்திருக்குமோ என  போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

Categories

Tech |