பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோ ஜி, மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.