விவசாயத்தில் பயிர் வளர்ச்சி வானிலையுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. இதில் சில பயிர்கள் முளைப்பதற்கும், அதனுடைய வளர்ச்சியை தொடருவதற்கும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வெப்பநிலை தேவைப்படுகிறது. அதனடிப்படையில் விவசாயிகள் விதைப்பு, பாதுகாப்பு, அறுவடை மற்றும் வயல் நடவடிக்கைகளுக்கான நேரத்தை திட்டமிடுவதன் மூலம் வானிலை பாதிப்புகள் மற்றும் மகசூல் இழப்பை தவிர்க்கலாம். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் பயிர் நிலைமைகள் மற்றும் மண்ணின் பயனுள்ள தகவல்களை வழங்க சில அளவீட்டு தொகுப்பை வழங்குகிறது.
அவை,
1. காற்று மண் மற்றும் மண் வெப்பநிலை
2. மண்ணின் ஈரப்பதம்
3. ஒப்பு ஈரப்பதம்
4.மழைப்பொழிவு
5. ஆவியாதல் தூண்டுதல்
6.காற்றின் வேகம்/திசை
மேற்குறிப்பிடப்பட்ட அளவுருக்களை கொண்டு நீர் பாசன நிகழ்வுகளின் அட்டவணை, பூச்சி எச்சரிக்கை மாதிரிகள், பயிர் உரமிடுதல் மற்றும் பாதுகாப்பிற்கான சரியான நேரத்தை தீர்மானித்தல் ஆகிய செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். இந்நிலையில் வானிலை தரவுகளின் அடிப்படையில் விவசாயம் செய்வது வெற்றிகரமான பண்ணை நிர்வாகத்திற்கு முக்கியமாக விளங்கும். விவசாயம் மிக முக்கியமான தொழில் ஆகும் ஏனென்றால் விவசாயம் நமக்கு உயிர் வாழ உணவை வழங்குகிறது. தற்போது காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் முன்பை விட அதிக உற்பத்தி மற்றும் விளைச்சலை தருகிறது. இதனால் ஆரோக்கியமான தாவரங்களை அடைவதற்கும், லாபத்தை அதிகரிப்பதற்கும் துல்லியமான வானிலை கண்காணிப்பு மிக மிக அவசியம்.