Categories
சினிமா தமிழ் சினிமா

“அஜித்திடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்”…. ரசிகர்களிடையே பரபரப்பு…. எதற்காக தெரியுமா?….!!!

நடிகர் அஜித்திடம் சுசீந்திரன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது H.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். வலிமை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் மற்றும் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர், பஸ்ட் லூக், ட்ரைலர் என வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் இயக்குனர் சுசீந்தரன் அஜித்திடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குனர் சுசீந்திரன் தற்போது வீரபாண்டியபுரம் படத்தை இயக்கி வருகிறார். அண்மையில் படத்தின் ஆடியோ சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய சுசீந்திரன், “அஜீத் அரசியலுக்கு வரவேண்டும் என்ற தனது தனிப்பட்ட கருத்தை நான் கூறியது தவறு” என கூறியுள்ளார். அவர் நல்லபடியாக வாழ்ந்து வருகிறார். அவர் அரசியலுக்கு வர தேவையில்லை என்று நான் இப்பொழுது கூறுகிறேன் என்று பேசியிருக்கிறார். அவர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று பேசி இருந்த பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |