Categories
மாநில செய்திகள்

காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கேக் வெட்டி விழிப்புணர்வு.!!

காவல் செயலி தொடர்பாக மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பொதுமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்.

உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு 2020ஐ பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். கோயில், பூங்கா, சுற்றுலாத்தலம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளைப் பறிமாறிக்கொண்டனர். அதன் ஒருபகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் திரளான இளைஞர்கள், குத்தாட்டம் ஆடியும் கேக் வெட்டியும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்றனர்.

இதனிடையே, மெரினா கடற்கரைக்குச் சென்ற சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், பொதுமக்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக் கூறிய ஆணையர், காவல் செயலி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

Categories

Tech |