திருவாரூரில் இன்று ( பிப்.12 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவாரூரில் கனமழை நீடிப்பதால் இன்று ( பிப்.12 ) மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது திருவாரூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.