ஓய்வூதியம் பெறுவோர் புதிய விதிகளின் படி பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தங்களது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 இல் இருந்து பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது. தீவிர கொரோனா பரவல் காரணமாக இந்த கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்கள் வீட்டில் இருந்தே இந்த வாழ்க்கை சான்றிதழை எளிய முறையில் சமர்ப்பிக்கலாம். அதற்கு முதலில் https://jeevanpramaan.gov.in/ என்ற இணைப்புக்குள் செல்ல வேண்டும். இங்கே பயோமெட்ரிக் மற்றும் அங்கீகாரம் மூலம் வாழ்க்கையை சான்றிதழை உருவாக்கலாம். இதற்கு ஆதார் எண், கைபேசி எண்,வங்கி விவரங்கள், ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதிய அனுமதி, ஓய்வூதியம் செலுத்தும் அமைப்பின் விவரங்கள் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.
தொடர்ந்து வாழ்க்கை சான்றிதழை உருவாக்கி ஸ்மார்ட் போன் மூலம் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி அல்லது ஏதேனும் செயலி வழியாக வீட்டிலிருந்தே வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அவ்வாறு இல்லையெனில் அந்தக் கிளைக்கு சென்று அல்லது ஆன்லைன் வழியாகவோ வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கலாம் அல்லது நேரடியாக அலுவலகத்திற்கு சென்றும் வாழ்க்கை சான்றிதழை கொடுக்கலாம்.