Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை….!! பதிவிறக்கம் செய்யும் வழிமுறை முழு விபரம் இதோ…!!

நாட்டின் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் இந்த சமயத்தில் வாக்காளர்கள் தங்களது மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒருவருடைய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விடும் பட்சத்தில் அவர் நகல் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அத்துடன் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி முகவரியையும் மாற்றிக்கொள்ளலாம்.

e-EPIC எனப்படும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிவை வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் இதை பெற்றுக்கொள்ளலாம். e-EPIC என்பது EPIC இன் பி.டி.எஃப் பதிப்பாகும். வாக்காளர்கள் தங்கள் கார்டுகளை மொபைல் போன்களில் சேமித்து வைக்கலாம், டிஜி லாக்கர்களில் பதிவேற்றலாம் அல்லது அச்சிட்டு லேமினேட் செய்து வைத்துக்கொள்ளலாம்.

Categories

Tech |