Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு?…. அரசின் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைந்து வருவதால் பிப்ரவரி 1-ஆம் தேதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த பயிற்சியின் முடிவில் அதற்குரிய பின்னூட்டத்தை பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் எழுதி வழங்குவார்கள். அவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும். மேலும் ஆசிரியர்களின் அனுபவத்திற்கு தகுந்தவாறு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “இனிமேல் எண்ணும், எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி 1 முதல் 5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அந்த பயிற்சியின் முடிவில் கொள்குறி வகையில் வினாத்தாள் கொண்ட தேர்வு ஆசிரியர்களுக்கு நடத்தப்படும். அந்த தேர்வுக்கான சான்றிதழும் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

அந்த சான்றிதழை பெறுபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஆசிரியர் கூட்டணி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளரிடம் கூறியதாவது, புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக கொண்டு வருவதாக மாநில திட்ட இயக்குனரின் இந்த சுற்றறிக்கை உள்ளது.

மேலும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த சுற்றறிக்கை மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் சான்றிதழை பெறாத ஆசிரியர்களின் நிலைமை என்ன ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுமா ? என்றும் கூறியுள்ளனர். ஆகவே ஆசிரியர்களின் அனுபவத்திற்கு தகுந்தவாறு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Categories

Tech |