11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு 14ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு 11 ஆம் வகுப்பில் அரியர் பாடங்களுக்கு மட்டும் துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 14ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் கூறியுள்ளது.
11 மற்றும் 12ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், பிளஸ்-1 பிளஸ்-2 தேர்வுகளில் முழுமையாக தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இரண்டு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை ஒரே சான்றிதழில் அச்சிட்டு ஒரே சான்றிதழ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு வகுப்புகளுக்கும் தனித்தனியாக சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.