Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓட்டு கேட்டு சென்ற வேட்பாளர்…. துரத்தி கடித்த தெருநாய்….. சென்னையில் பரபரப்பு சம்பவம்….!!

ஓட்டு கேட்டு சென்ற வேட்பாளரை தெரு நாய் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் தினகரன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் அனகாபுத்தூர் பாலாஜி நகர் 11-வது தெருவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவருடன் இரண்டு பேர் சென்றுள்ளனர். அப்போது தெருநாய் ஒன்று தினகரனை விரட்டி சென்று அவரது காலை கடித்துள்ளது.

இதனால் காயமடைந்த தினகரன் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக்கொண்டு ஓய்வெடுத்தார். அதன் பிறகு மாலை நேரத்தில் தினகரன் மீண்டும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தான் வெற்றி பெற்றால் தெருநாய்களை முதலில் ஒழிப்பேன் என தினகரன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |