Categories
மாநில செய்திகள்

“புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு செம ஹேப்பி நியூஸ்…!!” அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பரப்புரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது, “திருவாரூர் மாவட்டத்தில் 84 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் குடிசை பகுதிகளில் வாழ்வது தெரியவந்துள்ளது. இவ்வாறு திருவாரூர் மாவட்டத்தில் புறம்போக்கு மற்றும் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் குடிசை வாழ் மக்களுக்காக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி இடம் தேர்வு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா மன்னார்குடி பகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அரசு அறிமுகம் செய்துள்ளது எனவும், இதுவரை காணாத புதிய வளர்ச்சியை மன்னார்குடி பகுதி காணப் போகிறது எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |