ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலத்தில் சி.எஸ்.கே வில் ஆல்ரவுண்டரான அஸ்வின் இடம்பெறுவது மிகப்பெரிய பலம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் வைத்து ஐ.பி.எல்15 ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பெங்களூரில் வைத்து நடைபெறவுள்ள எலத்தில் சி.எஸ்.கே அணி தமிழகத்தை சேர்ந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
அதன்படி சி.எஸ்.கேவில் ஆல்ரவுண்டரான அஸ்வின் இடம்பெறுவது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஷாருக்கான் மற்றும் நடராஜனும் சிஎஸ்கே வில் இடம்பெற்றால் அவர்கள் வெற்றி பெறுவதற்கு பேருதவியாக இருக்கும் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.