Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலை துண்டித்து பெயிண்டர் கொலை…. உறவினர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலுவபள்ளி கிராமத்தில் வெங்கடேசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான பிரதீப் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சந்திரிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் பிரதீப்பை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். மேலும் அவரது தலையை துண்டித்து அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் வாசலில் வைத்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனை அடுத்து மறுநாள் காலை அவ்வழியாக சென்றவர்கள் பிரதீப்பின் தலை துண்டிக்கப்பட்டு கோவில் வாசலில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விவசாய நிலத்தில் கிடந்த பிரதீப்பின் உடல் மற்றும் கோவிலில் கிடந்த தலையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரதீப்பின் உறவினரான சந்தோஷ் என்பவரை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது பிரதீப், சந்தோஷ் மற்றும் உறவினரான முரளி ஆகியோருக்கு இடையே நில பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்ட போது சந்தோஷ் உள்பட 3 பேர் பிரதீப்பை வெட்டி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் முரளியை மற்றும் மற்றொரு நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |