கன்னி ராசி அன்பர்களே…!! இன்று இடையூறு செய்பவரை அறிந்துகொள்வீர்கள். பணி குறித்த காலத்தில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். பணச் செலவில் சிக்கனத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். பணியாளர் பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்ற வேண்டும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.
எந்த ஒரு வேலையிலும் முழு கவனம் இருக்கட்டும். குழப்பத்தில் அதாவது குடும்பத்தில் அதிகமான குழப்பம் இருக்கும் போது எந்தவித முடிவையும் எடுக்க வேண்டாம், பொறுமையைக் கையாளுங்கள். நீண்ட நாட்களாக இருந்த வந்த தடைகள் இன்று விலகி செல்லும், எதிர்ப்புகள் விலகி செல்லும். அதே போல் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நில நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்