Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…”தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்”.. பணவரவில் லாபம் அதிகரிக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று செயல்களில் உத்வேகமும் சமயோசிதமும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பண வரவில் லாப விகிதம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பெண்கள் நகை வாங்க அனுகூலம் ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க சிரமங்கள் கொஞ்சம் குறையும், வேலை வலு குறையும், உழைப்பு கொஞ்சம் வீணாகும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம் அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அதனால் திடீர் செலவுகள் ஏற்படும். இன்று மாணவக் கண்மணிகள் கடுமையாக உழையுங்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள். படித்த படத்தை எழுதிப் பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |