Categories
உலக செய்திகள்

அந்த நாட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்…. அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் உத்தரவு…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டில் இருக்கும் தங்கள் மக்கள் உடனடியாக வெளியேறிவிடுங்கள் என்று எச்சரித்திருக்கிறார்.

உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடித்து  கொண்டிருக்கிறது. இதில், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் அதிகமான தங்களின் படை வீரர்களை குவித்து வருகிறது.

மேலும், அமெரிக்கா தலைமையில் இயங்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை இணைக்க ரசியா எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, மேலும் மோதல் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் ரஷ்யாவும் பெலாரஸும் ஒன்று சேர்ந்து பத்து நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியை தொடங்கியிருக்கின்றன.

இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ரஷ்யாவை சேர்ந்த 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்பதாக வெளியான தகவல், உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், உக்ரைன் நாட்டில் இருக்கும் அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேறி விடுங்கள் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

Categories

Tech |