கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று மனதில் அன்பும் கருணையும் நிறைந்திருக்கும். உறவினர் நண்பர்கள் பாசத்துடன் உங்களிடம் நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சி ரொம்ப சிறப்பாகவே இருக்கும். பண பரிவர்த்தனையும் நல்லபடியாகவே நடக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ள கூடிய சூழலும் இருக்கும். இன்று மனம் உற்சாகமாக இருக்கும்.
மாணவர்கள் எதிர்பார்த்த மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள் கிட்டும். பண கஷ்டம் தீரும் இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும். எதிலும் மிகவும் கவனமாக இருப்பது மட்டும் எப்பொழுதுமே கும்ப ராசிக்காரர்களுக்கு ரொம்ப நல்லது. எடுத்த காரியங்களை சிறப்பாக செய்வதற்கு கடினமாகவும் நீங்கள் உழைப்பீர்கள். சொத்து சம்பந்தமான காரியங்களில் தாமதம் கொஞ்சம் இருக்கும் இருக்கட்டும், பொறுமையை கடைபிடியுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீலத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்