Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் விஜயலட்சுமி என்பவர் காவல் ஆய்வாளராக வேலைபார்த்து  வருகிறார்.இவருக்கு தங்கபாலன் என்ற கணவன் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  ராகுல் அசோக் என்ற மகன் இருந்துள்ளார். விஜயலட்சுமி மத்திய குற்றப்பிரிவு பகுதியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில்  இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராகுல் அசோக் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார்.

இவர் ரயில்வே பாலம் அருகில் சென்று கொண்டிருந்த  போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ராகுல் அசோக்கின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுல் அசோக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால்அங்கு அளிக்கப்பட்ட  சிகிச்சை பலனின்றி ராகுல் அசோக் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |