Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. மகனின் கோவத்தால் தந்தை கொலை…. எதுக்குன்னு நீங்களே பாருங்க….!!

பெங்களுரில் திருமணம் செய்து வைக்காததால் தந்தை என்று கூட பாராமல் தலையில் கல்லை போடு கொலை செய்த மகன். 

பெங்களுரின் ராய்ச்சூர் மாவட்டத்தின் தேவி துர்கா தாலுகா கெப்பூர் கிராமத்தை  சேர்ந்தவர் பசவராஜப்பா(வயது 75). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அவர். இவருக்கு திருமணம் ஆகாத ஜெகதீஸ்(35) என்று ஒரு மகன் இருக்கிறார். அவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி பசவராஜப்பாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பசவராஜப்பா தேவதுர்காவில் இருந்து ராய்ச்சூர் டவுனில் உள்ள தனது மகள் வீட்டுக்கு தனது மனைவியுடன் சென்று இருந்தார். அங்கு திடிரென்று அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றனர். கோசாலே ரோட்டில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஜெகதீஸ் தனது தந்தையுடன் தகராறு செய்து அவரை அடித்து, உதைத்து கீழே தள்ளி விட்டார். பின்பு ஜெகதீஸ் சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து பசவராஜப்பா தலையில் போட்டு உள்ளார். இதனால் தலை நசுங்கி பசவராஜப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஜகதீஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த போலீஸார் விரைந்து வந்து பசவராஜப்பா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திருமணம் செய்து வைக்காததாகவும் சொத்து பிரித்து கொடுத்தாலும் தனது தந்தையை ஜெகதீஷ் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ராய்ச்சூர் டவுன் காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷ் கைது செய்தனர். மேலும் ஜெகதீஷிடம்  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |