பருத்தி வீரன் படத்தில் நடித்த நடிகர் ஆறுமுகம் தனது அனுபவத்தை பேட்டி ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இப்படத்தில் சரவணன், பிரியாமணி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான். ஆனால் இப்படத்தில் டீக்கடை ஓனராக நடித்த காட்சி ஒன்றில் ஆறுமுகம் என்பவர் நடித்திருந்தார். அவரர் இன்னும் மக்களிடத்தில் பிரபலமானவராக தான் இருக்கிறார். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் ஆறுமுகத்தை பேட்டி எடுத்து தமிழ் சினிமா அனுபவத்தை பகிருமாறு கேட்டுள்ளார்.
அதில் அவர் படத்தில் நடித்து 15 வருடம் ஆகிவிட்டது ஒரே ஒரு காட்சியில் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமானது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அப்போ எனக்கு சொந்தமான டீக்கடை ஒன்று இருந்தது. அப்போது கடையில் இருக்கும்போது ஒரு படக்குழுவினர் வந்தனர். எனக்கு என்ன பண்ண போறாங்கன்னு எதுவுமே தெரியல. அப்போது தாடி வைத்திருந்த ஒருவர் வந்தார் அவர் தான் அமீர் சார் என்று சொன்னார்கள். நீங்க உட்கார்ந்து எழுந்து இருக்கிற மாதிரி இருக்க சொன்னாங்க நானும் உட்கார்ந்துட்டு இருக்கிற மாதிரி இருந்தேன். அப்போது என்னிடம் வந்து டயலாக் சொன்னாங்க அவங்க சொன்ன மாதிரியே முடித்து தந்தேன். மேலும் மதுரையில் மூணு தியேட்டரில் இந்தப் படத்தைப் போட்டாங்க நான் போய் பார்த்தேன். அப்ப அங்கு இருக்கிற பல பேருக்கு என்னை தெரியல அதுல ஒருத்தர் மட்டும் நீங்க தான் இந்த படத்தில் நடிச்சிருந்திங்களானு கேட்டாங்க எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது.
பருத்தி வீரனுக்கு அப்புறம் எனக்கு தாமிரபரணி, சீமராஜா, ரஜினி முருகன் போன்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்ப எந்த வாய்ப்பும் வரவில்லை வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் அதற்கான திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். மேலும் பருத்திவீரன் டப்பிங் இருக்குனு சென்னை வந்ததேன். டப்பிங் பேசி முடித்துவிட்டு அமீர் சார் அவருடைய அசிஸ்டென்ட்டை அனுப்பி என்னை மதுரைக்கு பஸ் ஏறி விடுமாறு சொன்னார்கள்.
அவர்கள் என்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு கூட்டிப்போய் இதான் மதுரை போற பஸ்னு கைல 200 ருபாய் கொடுத்தார். அவரிடம் நான் எப்படி இதை வச்சிக்கிட்டு மதுரை போறதுன்னு கேட்டுக் கொண்டு இருக்கும்போதே அவரு அங்க இருந்து போயிட்டாரு. அப்புறம் அந்த 200 ரூபாயை வைத்து பாண்டிச்சேரிக்குப் போய் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட காசு வாங்கிட்டு கடைக்கு போனேன் என்றார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிச்சிட்டு வந்தேன். இப்போ கொரோனா வந்துருச்சு. அப்படியே எல்லாம் நின்னு போச்சு. அது போக சீரியல்ல நடிக்க கூப்பிட்டுக்கிட்டு இருக்காங்க என்று கூறியுள்ளார்.