பிரான்ஸ் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது. தற்போது கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிரான்ஸ் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் போதுமானது. மேலும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டாம் என்றும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காண்பித்தால் போதும் என்றும் அறிவித்துள்ளது.