வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரம் கிராமத்தில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய ஹேமா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சார்லசின் மனைவி குடிப்பதற்காக வெந்நீர் வைத்துள்ளார். அப்போது விளையாடி கொண்டிருந்த ஹேமா வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சார்லஸ் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.