தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா, கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட வேண்டுமா, இல்லை கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா, உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி வர இருப்பதால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று (பிப்..12) நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் மார்ச் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிப்ரவரி 16 முதல் மார்ச் 2 வரை புதிய ஊரடங்கு தளர்வுகள் அமல் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..