Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய ராக்கெட்…. சோகத்தில் ஆஸ்ட்ரா நிறுவனம்…. வருத்தம் தெரிவித்த தலைமை செயல் அதிகாரி….!!

நாசா நிறுவனத்துடன் இணைத்து செயற்கைகோள்களுடன் அனுப்பப்பட்ட ராக்கெட் வெடித்து சிதறியது. 

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் உள்ள ராக்கெட் தயாரிப்பு நிறுவனம் ஆஸ்ட்ரா. இந்த நிறுவனம் முதல் முதலில் விண்வெளிக்கு தனது செயற்கை கோள்களை ராக்கெட்டின் மூலம் நாசாவுடன் இணைத்து அனுப்புவதற்கு முடிவு செய்தது. இதனை தொடர்ந்து நேற்று புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து நாசாவின் 4 செயற்கைகோள்களுடன் ஆஸ்ட்ரா நிறுவனத்தின் ராக்கெட் வானத்தை நோக்கி சென்றது.

ஆனால் அந்த ராக்கெட் சென்ற சில மணிநேரத்திலேயே திடீரென வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து ராக்கெட்டின் சில பகுதிகள் அண்டார்டிகா பெருங்கடலில் விழுந்தன. இந்த விபத்து குறித்து ஆஸ்ட்ரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் கெம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் “எங்கள் நிறுவனம் ராக்கெட்டின் முதல் பயணத்தில் ஒரு சிக்கலை எதிர் கொண்டோம். எங்கள் வாடிக்கையாளர்கள் செயற்கைக்கோள்களை அனுப்பிவிட்ட இடத்தில் நிலைநிறுத்த முடியாமல் போனதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |