Categories
சினிமா

“நல்ல கதையாக இருந்தா கட்டாயம் சேர்ந்து நடிக்க தயார்”…. பிரபல நடிகரின் மகன் ஆர்வம்….!!!

நடிகர் விஜய் மகனுடன் சேர்ந்து நடிகர் விக்ரமின் மகன் நடிக்க தயாராக உள்ளதாக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம். இவர்  தமிழ் சினிமாவிற்கு கடந்த 2019- இல் வெளியான “ஆதித்யா வர்மா” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தனது முதல் படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மகான் என்ற படத்தில் தந்தை விக்ரம் உடன் சேர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்.

மேலும் ஓடிடி தளத்தில் இந்தப் படம் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில்,சில விஷயங்களை துருவ்  விக்ரம் பகிர்ந்துள்ளார். அதில் நானும் நடிகர் விஜய் சாரின் மகனுமான சஞ்சய்யும் சிறுவயதிலிருந்து நல்ல நண்பர்கள். அதனால், அவர் நல்ல கதையுடன் வந்தால்  நான் அந்தப் படத்தில் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார். மேலும் பாலிவுட் படங்களில் வருவதை போல அந்த படம் இரண்டு கதாநாயகர்களின் வாரிசுகள் சேர்ந்து இணையும் படமாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |