Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…. எதற்கெல்லாம் அனுமதி?.. எதற்கெல்லாம் தடை?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா, கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட வேண்டுமா, இல்லை கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா, உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி வர இருப்பதால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று (பிப்..12) நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில்,

நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி:

# தமிழகத்தில் நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

# எல்.கே.ஜி., யூ.கே.ஜி மாணவர்கள் பயிலும் பள்ளிகளை திறக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

# மழலையர் விளையாட்டு பள்ளிகளான பிளே ஸ்கூல்களை திறக்கவும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்களுக்கு தடை தொடரும்:

# சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் ஆகிய பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு உள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணங்களில் 200 பேர் வரை கலந்துக்கொள்ளலாம்:

# திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளை அதிகபட்சமாக 200 நபர்களுடன் மட்டுமே நடத்த அனுமதி.

# துக்க நிகழ்வுகளில் 100 பேர் வரை கலந்து கொள்ளலாம்.

பொருட்காட்சிக்கு அனுமதி:

# தமிழகத்தில் பொருட்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் நீட்டிப்பு:

# தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கொரோன தடுப்பு கட்டுப்பாடுகள் வருகிற 16-ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |