Categories
உலக செய்திகள்

இத்தனை கோடியா…? ஆப்கானிஸ்தான் பணத்தை இரண்டாக பங்கிட்ட அமெரிக்கா….

அமெரிக்க அரசு தங்களிடமிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய 52 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தொகையை நிவாரணம் மற்றும் இரட்டை கோபுர தாக்குதலில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு வழங்க தீர்மானித்திருக்கிறது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியவுடன், வெளிநாடுகளில் இருக்கும் அந்நாட்டிற்குரிய சொத்துக்கள் முடக்கப்பட்டது. அந்தவகையில், அமெரிக்காவில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய 52 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய வங்கிக்குரிய அந்த பணத்தை இரண்டு பங்குகளாக பிரித்து வழங்க தீர்மானித்திருக்கிறது.

அதில் ஒரு பங்கை ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு நிவாரண தொகையாக வழங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தலீபான்களிடம் இந்த பணம் கொடுக்கப்படாமல் நேரடியாக அந்நாட்டின் மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு பங்கை, கடந்த 2001-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் பாதிப்படைந்த மக்களுக்கு பகிர்ந்து அளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |