ஓடும் பேருந்தில் பயணிகளிடமிருந்து பணத்தை திருடிய குற்றத்திற்காக 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலைச்சிவபுரி பேருந்து நிலையத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்தில் சொர்ணவல்லி மற்றும் லட்சுமி என்ற இரண்டு பெண்கள் ஏறினார். அவர்கள் இருவரும் சேர்ந்து அதே பேருந்தில் பயணம் செய்த கோகிலா என்பவரின் பணப்பையை திருடினர். இதை கவனித்துக் கொண்ட கோகிலா இருவரையும் கையும் களவுமாக பிடித்தார்.
இது குறித்து பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி விரைந்து சென்ற காவல்துறையினர் சொர்ணவள்ளி மற்றும் லட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர்.