Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்று வந்த வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் கோர விபத்து….!!

மேம்பால சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சித்துராஜபுரம் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கண்ணன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கண்ணனும், அவரது நண்பரான பாண்டி தங்கம் என்பவரும் ஒரு துக்க வீட்டிற்கு வந்திருந்தனர். அதன் பின்னர் இருவரும் கன்னியாகுமரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கயத்தாறு-தேவர்குளம் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென மேம்பாலத்தின் சுவரில் பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பாண்டிதங்கம் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். மேலும் விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் யாரும் விபத்தை பார்க்கவில்லை. இதனையடுத்து சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாண்டி தங்கத்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த தகவலறிந்த கயத்தாறு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |