Categories
உலக செய்திகள்

ஹிஜாப் பிரச்சனை: மத சுதந்திரத்தை மீறுகிறது…. அமெரிக்காவின் கருத்திற்கு இந்தியா பதிலடி…!!!!!!

ஹிஜாப் விவகாரம் குறித்து பல்வேறு நாடுகளும் தெரிவித்த கருத்திற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்திருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய மாணவிகள் ஆறு பேர், வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து ஹிஜாப் அணிந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் அந்த மாணவிகள் தங்களது உடை விவகாரங்களில் கல்லூரி நிர்வாகம் தலையிடுகிறது என்று கர்நாடக மாநிலத்தின் உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஹிஜாப் போராட்டத்தை எதிர்த்து மாணவர்கள் சிலர் காவித்துண்டு அணிந்துகொண்டு போராட்டம் நடத்தினார்கள்.

இது மட்டுமன்றி, ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு அனுமதி வழங்கினால், காவி துண்டு அணிந்து நாங்கள் வருவதையும் அனுமதிக்க வேண்டுமென்று மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இதனால், கல்லூரிகளில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில், ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தர விட மறுத்துவிட்டது.

மேலும், வழக்கு விசாரணையை தலைமை நீதிபதிக்கு மாற்றுவதாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் நடக்கும் இந்த பிரச்சனைக்கு சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அலுவலகமானது, கர்நாடகாவில் ஹிஜாப் தடை செய்யப்படுவது மத சுதந்திரத்தை மீறுவதாகவும், சிறுமிகள் மற்றும் பெண்களை களங்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், மத்திய அரசு கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சில கல்வி நிறுவனங்களில் இருக்கும் சீருடை தொடர்பான பிரச்சனை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. எனவே, இந்த பிரச்சனை பற்றி உள்நோக்கமுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளி கருத்துக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று பதிலடி கொடுத்திருக்கிறது.

Categories

Tech |