Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… திடீர் குழப்பம் ஏற்பட்டு சரியாகும்”… நிதானத்தை கடைபிடியுங்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! நீதி நேர்மைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அக்கம் -பக்கத்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். பெரியோர்களிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

மனதில் மட்டும் திடீர் குழப்பம் ஏற்பட்டு சரியாகும். சமையல் செய்யும் பொழுதோ அல்லது மின் சாதனங்களைப் பயன்படுத்தும் பொழுதோ ரொம்ப கவனமாக இருங்கள். கூடுமானவரை நிதானனத்தை மட்டும் இன்று கடைபிடியுங்கள். இன்று மாணவ செல்வங்கள் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்ள எழுதிப்பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |