பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரரான ஸ்ரேயஸின் ஆரம்ப விலை 2 கோடியாக இருந்த நிலையில் அவரை கொல்கத்தா 12.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள்.
இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இந்நிலையில் இந்திய வீரரான ஸ்ரேயஸின் ஆரம்ப விலை 2 கோடியாக இருந்துள்ளது. ஆனால் போகப்போக அனைத்து அணிகளும் இவருக்காக போட்டி போட்டதையடுத்து ஸ்ரேயசை கொல்கத்தா அணி 12.25 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் இந்த அணி கம்மிஸை 7.25 கோடிக்கு வாங்கியுள்ளது.