Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

250 எவர்சில்வர் வாலிகள் ….சோதனையில் சிக்கிய பொருள் …. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 250 எவர்சில்வர் வாலிகளை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி.  சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி பாலசுப்பிரமணியன் என்பவர் 250 எவர்சில்வர் வாலி  மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும்படையினர் பணம் மற்றும் வாலியை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |