Categories
தேசிய செய்திகள்

பிப்-20 பொதுவிடுமுறை: ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு…. அதிரடி உத்தரவு…!!!

உத்தர பிரதேசம்,கோவா, பஞ்சாப்,
மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தேதியில் அனைத்து தரப்பு மக்களும் எளிமையாக வாக்களிக்கும் விதமாக அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா தனியார் நிறுவனங்கள் என அனைத்திலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகம், வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் என அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விடுப்பு பொருந்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் சில நிறுவனங்கள் செயல்படும் என்ற காரணத்தினால் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |