மாணவர்களுக்கு இஸ்ரோ நடத்தும் கோடைகால முகாமில் பங்கேற்க ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் குழந்தைகள் அறிவியல் மற்றும் விண்வெளியில் ஆர்வமுள்ள குழந்தைகள் மே 11 முதல் 22 வரை இஸ்ரோ நடத்தும் யுவிகா எனப்படும் கோடைகால சிறப்பு முகாமில் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள் பிப்ரவரி 13 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு w.w.w.isro.gov.in என்ற இணையதள முகவரியை சென்று பார்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். ஆர்வமுள்ள குழந்தைகள் பெங்களூரு, அகமதாபாத், திருவனந்தபுரம் மற்றும் சிலாங் ஆகிய இடங்களில் உள்ள இஸ்ரோ மையங்களில் நடைபெறும் யுவிகா கோடைகால சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.