வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் பரமத்திவேலூர் அடுத்துள்ள வெங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அப்பகுதி வழியாக செல்லும் இருசக்கர வாகனம், கார், வேன், சரக்கு லாரிகள் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி முழுவதுமாக சோதனை செய்த பின்னரே வாகனங்களை அனுமதித்து வருகின்றனர். இதனால் வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.