தனுஷ், ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ்வது குறித்து ஒரு உறுதியான முடிவை எடுத்திருக்கிறார்.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இதனையடுத்து தனுஷ் அவரின் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஐஸ்வர்யாவும் அவரது பணியில் கவனம் செலுத்த சென்றுவிட்டார். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க உற்றார் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஐஸ்வர்யாவின் தந்தையான நடிகர் ரஜினிகாந்த் தனுஷுடம் கூறியதாவது, “உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் பிரச்சனையை மட்டுமே கருத்தில் கொண்டு பிரிந்து சென்றால் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்” என கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி யோசித்த ஐஸ்வர்யா பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தனுஷிடம் சேர்ந்து வாழ்ந்து விடலாம் என முடிவெடுத்து இருக்கிறார் . இதைத்தொடர்ந்து தனுஷின் அப்பாவிடம் ஐஸ்வர்யா தனது முடிவை கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட தனுஷின் அப்பா மகிழ்ச்சி அடைந்ததோடு தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஆனால் தனுஷ் இனி நான் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ இயலாது என கூறியிருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் தனுஷுக்கு போன் செய்து இதுகுறித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ஆனால் தனுஷ் ஐஸ்வர்யாவைவிட்டு பிரிந்த பிறகுதான் நான் மிகவும் சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் இருப்பதாக கூறி இருக்கிறார்.தனுஷ் இனி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என உறுதியாக உள்ளார்.