சூரிய புயல் காரணமாக விண்ணில் செலுத்திய 40-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 40 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியது. மேலும் சூரிய புயல் தாக்குதலின் காரணமாக புவி வட்டப்பாதையில் இருந்த 40 செயற்கைக்கோள்களும் விலகி வளி மண்டலத்துக்குள் நுழைந்து எரிந்து விட்டன. இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறியதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை அன்று சூரிய புயல் உண்டாகி வளிமண்டலத்தை அடர்த்தியாக்கியது. இதனால் விண்வெளியில் செலுத்தியிருந்த 49 செயற்கை கோள்களில் 40 செயற்கைக்கோள்கள் புவி வட்டப் பாதையில் இருந்து விலகி மீண்டும் வளி மண்டலத்துக்குள் நுழைந்து அழிந்து விட்டன. மேலும் சில செயற்கை கோள்கள் புவி வட்டப்பாதையில் இருந்து விலகும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில் விபத்தை தவிர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. இதனால் பூமிக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுமார் 2000 ஸ்டார்லிங் செயற்கைகோள் சுற்றி வருகின்றன.மேலும் இந்த செயற்கை கோள்கள் பூமியை 340 மையில்கள் அதிகமான உயரத்தில் சுற்றி வருகின்றது என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது”. இதனைத் தொடர்ந்து சூரிய புயல் பூமியை தாக்கினால் இணையதளம் பாதிக்கப்படுவதோடு உலகமே இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது. மேலும் இதுபோன்ற சூரியப் புயல்கள் இனிவரும் காலங்களில் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.