ஹாலிவுட்டின் நகைச்சுவை நடிகரான பாப் சகெட், ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹாலிவுட் நடிகரான பாப் சகெட், பெஞ்சமின், டிரம்ப் அண்ட் டம்பரம், ஹாஃப் பேக்ட், நியூயார்க் மினிட், ஐ அம் கிரிஸ் ஃபேர்லெ, எ ஸ்டெண்ட் அப் கய், உட்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார்.
இந்நிலையில், ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, கடந்த 9ம் தேதி அன்று, அவர் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. எனவே, ஹோட்டல் பணியாளர்கள் அறை கதவை திறந்த போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவரின் குடும்பத்தினர் தெரிவித்ததாவது, அவர் குளியலறையில் தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டிருப்பதாக எங்களிடம் கூறினார். அதன்பின்பு அவர் படுக்கையில் படுத்திருந்தார். தலையில் அடிபட்டதால் தான் அவர் உயிரிழந்தார் என்று கூறியுள்ளனர்.