Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. தடுப்பூசி முகாமில் அதிரடி மாற்றம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என்று மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பணிகள் விதிமுறைகள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதனிடையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் (19ம் தேதி )நாளன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுப்பூசி பெருமளவு குறைத்து வருகிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன் மூலமாக நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தற்போது வரையிலும் 22 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்து உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரையிலும் முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 70.42 சதவீதம் பேர் மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் இளம் சிறார்களுக்கான தடுப்பூசி 80.90 சதவீதம் பேர் செலுத்தி உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அடுத்த வாரம் சனிக்கிழமை 23 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருந்த நிலையில், அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |