கஜோல் மும்பையில் உள்ள ஜூகு பகுதியில் இரண்டு அப்பார்ட்மெண்ட்களை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை கஜோல். நடிகை ஷாருக்கானும் இவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் அடித்தது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் கடைசியாக தில்வாலே படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.
இதனையடுத்து தற்போது இருவரும் தனித்தனியாக தான் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கஜோல் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது பதிவு செய்து கொண்டே இருப்பார். தற்போது இவரை பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இவர் மும்பையில் உள்ள ஜூகு பகுதியில் இரண்டு அப்பார்ட்மெண்ட்களை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு அப்பார்ட்மென்டின் விலை 11.95 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.