Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண் அலுவலரிடம் வழிப்பறி…. 2 வாரத்திற்கு பிறகு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….

வட்ட வழங்கல் அலுவலரிடம் இருந்து சங்கிலியை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் என்ற இடத்தில் வெப்படை பகுதியில் வசித்து வரும் வசந்தி(31) என்பவர் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வசந்தி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது வெப்படை தனியார் நூல்மில் அருகே 2 வாலிபர்கள் வழிமறித்து வசந்தி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வெப்படை பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் தேவனாங்குறிச்சியை சேர்ந்த டேவிட் (27), அருண் (23) என்பது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வட்ட வழங்கல் அலுவலர் வசந்தியின் சங்கிலியை பறித்து சென்றது டேவிட் மற்றும் அருண் என்பது விசாரணையில் உறுதியானது. இதனையறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |