இந்திய கடற்படை கடற்பகுதியில் உள்ள படகுகளில் நடத்திய சோதனையில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதை பொருள்களை கைப்பற்றியுள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய கடற்படையுடன் இணைந்து கடற்பகுதியில் உள்ள படகுகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 800 கிலோ போதைப் பொருட்கள் பிடிபட்டதாகவும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ.2,000 கோடி எனவும் இந்திய கடற்படை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.