தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று புதிதாக 2,812 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,33,966-ஆக உள்ளது.
மேலும் கொரோனாவிலிருந்து 11,154 பேர் குணமடைந்துள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 33,48,419-ஆக உள்ளது. அதேபோல் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,904-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது 47,643 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.