Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

7 கோடி மதிப்புள்ள ஹொகைன்…. கடத்தலுக்கு உதவிய போலீஸ்…. மேலும் 3 பேர் கைது….!!

ஹொகைன் போதைபொருள் கடத்தல் வழக்கில் போலீஸ் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த பேருந்தில் இருந்து இறங்கிய நபர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த சூரியகுமார்(27) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது சுமார் 1 1/2 கிலோ எடையுள்ள ஹொகைன் எனப்படும் போதை பவுடர் பாக்கெட்டுகள் இருந்துள்ளது. இதனுடைய சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 7 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த போதைப் பொருள் நைஜீரியா நாட்டில் இருந்து ஈரோட்டிற்கு கடத்தி வரப்பட்டது என்றும், அதனை ராமேஸ்வரத்தில் உள்ள சில நபர்களுக்கு கொடுப்பதற்காக வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சூரியகுமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் எம்.ஆர்.பி.நகரை சேர்ந்த அங்குரதராம் (36), சின்னவன் பிள்ளை தெருவை சேர்ந்த முகமது இஸ்மாயில் சேக் (36), பாம்பன் பகுதியை சேர்ந்த சாதிக் அலி (27), அக்காள் மடத்தை சேர்ந்த மனோஜ் (21) ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் சந்தேகத்தின் பேரில் போலீஸ்காரர் உட்பட 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானது.

எனவே எம்.ஆர்.டி. நகரை சேர்ந்த காவல்துறை அதிகாரியான பாலமுருகன், பாம்பன் பகுதியை சேர்ந்த ஜோசப், டைமண்ட் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஹொகைன் போதைபொருள் கடத்தலில் போலீஸ் அதிகாரியும் கைதாகிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |