மேற்கத்திய நாடுகளுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்ற இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கத்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி உள்ளது. இதில் முதலிரண்டு போட்டிகளிலும் அந்த அணி தோல்வியடைந்த நிலையில் கடைசி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர்80(111,) ரிஷப் பந்த்56(54) ஆகியோர் ரன்களை குவித்தனர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கத்திய தீவுகள் அணி 169/10 ரன்கள் மட்டும் எடுத்தது. மேலும் 96 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது போட்டியிலும் தோற்றது. இந்தியா3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதில் தொடர்ந்து பவுன்சர் வீசி, பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வந்தவர் பிரசித் கிருஷ்ணா ஆவர். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
போட்டிகள் முடிந்த பின் ரோகித்சர்மா இதுபற்றி கூறியதாவது “இத்தொடர் நாங்கள் நினைத்த மாதிரியே இருந்தது. மேலும் இந்திய அணி குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வீரர்கள் குறித்து அணி குறித்து பல பேர் பல விதமாக பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பினும் நாங்கள் அதை கண்டுகொள்வதில்லை அணிக்கு தேவையானது தான் செய்ய முடியும் என அவர் கூறினார்.
மேலும் கிருஷ்ணா பந்து வீசியது போல் இதற்கு முன் யாரும் இந்திய மண்ணில் பந்து வீசி பார்க்கவில்லை எனவும் தொடர்ந்து பவுன்சராக வீசினார். முகமது சிராஜ், ஷர்தூல் தாகூர், தீபக் சஹார் போன்றவர்களின் தொடரில் சிறப்பான பந்து வீச்சாளர்கள் ஆவர். ஸ்கோர் 40/3 என இருந்த நிலையில் நெருக்கடிகளை சமாளித்து மிடில் வரிசை பேட்ஸ் மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர்” என்றும் தெரிவித்தார்.