வாக்கு எண்ணும் அதிகரிகளுக்கு உணவு வழங்காததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதிலும் 315 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியும் இன்னும் சில மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட வில்லை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு காலை உணவு தரப்படாததால் வாக்கும் எண்ணும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றது.
இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றிய, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் , கிழக்கு ஊராட்சி ஒன்றியம் , திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு வாக்கு எண்ணிக்கை மையங்களில் உணவு முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையில் பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தற்போது வாக்குகளை வகைப்படுத்தப்பட்டு வருகின்றது.