ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதற்காக ரயில் மூலம் திருச்சிக்கு வந்த மூன்று சிறுவர்களை ரயில்வே காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மேலும் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறுவர்கள் பணிபுரிவதற்காக வரக்கூடிய நிகழ்வு கடந்த சில மாதங்களாக இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.